நான் சாதாரண மனிதர்களைப் போல் தான் தமிழ்நாடு வேளாண்மைத் துறையில் அலுவலராக பணியாற்றி வந்தேன். 2000ம் ஆண்டு எனக்குள் சில மாற்றங்கள் நிகழ்வதை கண்டேன். இதுவரையிலும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்து வந்தேன்.
நான் தூங்கும் போது என்னிடம் யாரோ பேசுவது போல் உணர்ந்தேன். அப்போது நிஜ உருவில் தரிசனம் தந்து நான் யார் என்று விபரங்கள் கூறினார்கள.
சிவகாசிஅருகில் இருக்கன்குடியில் உள்ள மாரியம்மனுக்கு அடியில் உள்ள ஶ்ரீசிவஞான குரு சித்தர் தான் நான் என்றும் என் மூலமாக உலகிற்கு பல சித்துக்கள் செய்ய வேண்டும். அதனால் துறவறம் வர வேண்டும் என்று கட்டளையிட்டார். நான் எனக்கு குடும்பம், குழந்தைகள் உள்ளார்கள். நான் வீட்டை விட்டு இல்லறத்தை விட்டு வரமாட்டேன் என்று கூறினேன்.
உனது வயது 70 ஆகும் போது இல்லறத்தை விட்டு வர வேண்டும். அதுவரையில் உன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு மூலிகை மூலம் பல அற்புதங்கள் செய்ய வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார். அதன்படி எனது தாத்தா சிவஞான குரு சித்தர் அவர்கள் தினமும் இரவில் என்னிடம் மூலிகை விபரம், இருக்குமிடம், அதன் பயன் முதலியவற்றைத் தெளிவாக கூறுவார்கள்.
அதன் வழிமுறையில் சென்னையில் 2004 முதல் "அபூர்வ மூலிகைப் பொருட்கள்" மூலம் எல்லோரது பிரச்சனைகளையும் முழுவதுமாக தீர்த்து வருகின்றேன். எனது அபூர்வ மூலிகைப் பொருட்கள் தமிழகம், இந்தியா, ரஷியா, சீனா, ஹாங்காங், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற எல்லா நாடுகளிலும் எனது மூலிகைப் பொருட்களை பயன்படுத்தி சந்தோஷமாகவும் ஆனந்தமாகவும் உள்ளார்கள்.
1. நான் ஜெயா டிவியில் காலைமலரில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருக்கின்றேன்.
2. எப்படிப்பட்ட பிரச்சனைகளையும், துயரங்களையும் நீக்கும் பூஜை, பரிகாரங்கள்.
3. அபூர்வ மூலிகைப் பொருட்கள்.
4. சித்தர் முறையில் உங்களது பிரச்சனைகளை நீங்களே சரிசெய்து கொள்ளும் பயிற்சி கையேடுகள்.